தொழிலதிபர் ஒருவரின் வீட்டை கடந்த மாதம் உடைத்து 7 மில்லியன் ரிங்கிட் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை திருடியதாக நம்பப்படும் இரு கொலம்பிய ஆடவர்கள் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றமற்றவர்கள் என்று கூறி விசாரணை கோரினர். மே 31 அன்று இரவு புக்கிட் டாமன்சாராவில் உள்ள இந்திரா இஸ்வான் யூசோஃப் (45) என்பவரின் வீட்டிற்குள் நுழைந்ததாக Yeyson Andres Rocha Garzon, 39, மற்றும் Julian David Serna Pena 22, ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 457 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது இது அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், திருட்டில் ஈடுபட்டிருந்தது நிரூப்பிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் வரை சிறை நீட்டிக்கப்படலாம் மற்றும் அபராதமும் விதிக்கப்படலாம். அரசு தரப்பில் துணை அரசு வக்கீல் சித்தி நோர்ஸ்யுஹாதா அப்துல் ரவூப் ஆஜரானார். பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான வான் அஸ்மிர் வான் மஜித், குற்றச்சாட்டு தொடர்பான பிரதிநிதித்துவங்களை சமர்பிப்பதாக தெரிவித்தார். நீதிபதி அஸ்ரோல் அப்துல்லா ஜாமீன் மறுத்ததோடு, ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு வழக்கினை ஒத்தி வைத்தார்.


