சிங்கப்பூரில் Kian Teck ரோட்டில் உள்ள தொழிற்சாலையின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த சோலார் பேனல்கள் தீப்பிடித்து எரிந்தது.
இச்சம்பவம் குறித்து பிற்பகல் சுமார் 1.40 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு தகவல் வந்ததாக தெரிவித்தது.
இது குறித்து அதன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்னதாகவே அங்கிருந்து 76 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

