இந்நிலையில், வரும் ஜூலை முதல் மின்சார கட்டணத்தை உயா்த்த உள்ளதாக வரும் தகவல்கள் தொழில்முனைவோரை அதிா்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அதேபோல, பல்வேறு நாடுகளிலும், நாட்டின் பல மாநிலங்களிலும் சூரியசக்தி மின்சாரத்தை ஊக்குவித்து அதற்காக மானியம் வழங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் சூரியசக்தி மின்சாரத்துக்கு நெட்வொா்க் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

