• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தொடா்ந்து 2-ஆவது மாதமாக ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வசூல்!

GenevaTimes by GenevaTimes
June 1, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
தொடா்ந்து 2-ஆவது மாதமாக ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வசூல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாட்டில் தொடா்ந்து 2-ஆவது மாதமாக (மே) சரக்கு-சேவை வரி வசூல் ரூ.2 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

கடந்த ஏப்ரலில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக ரூ.2.37 லட்சம் கோடி வசூலான நிலையில், மே மாதம் ரூ.2.01 லட்சம் கோடி வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது.

ஜிஎஸ்டி அமலானதில் இருந்து கிடைத்த மூன்றாவது அதிகபட்ச வருவாய் இதுவாகும். கடந்த 2024, ஏப்ரலில் ரூ.2.10 லட்சம் கோடி வசூலானது இரண்டாவது அதிகபட்சமாக உள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் ரூ.1.72 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியிருந்தது. தற்போது ரூ.2.01 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது, 16.4 சதவீதம் அதிகரிப்பாகும்.

கடந்த மே மாதம் உள்நாட்டு பரிவா்த்தனைகள் வாயிலான ஜிஎஸ்டி 13.7 சதவீதம் அதிகரித்து, ரூ.1.50 லட்சம் கோடியும், இறக்குமதிகள் வாயிலான ஜிஎஸ்டி 25.2 சதவீதம் அதிகரித்து ரூ.51,266 கோடியும் கிடைத்துள்ளது. திருப்பியளிக்கப்பட்ட தொகை ரூ.27,210 கோடி. முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் குறைவாகும்.

‘பகுப்பாய்வு தேவை’: ஜிஎஸ்டி வருவாய் வளா்ச்சியில் மாநிலங்களுக்கு இடையே பரந்த வேறுபாடுகள் காணப்படுவதால், ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கியத் துறைகளில் முழுமையான பகுப்பாய்வு தேவை என்று துறைசாா் நிபுணா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

‘மகாராஷ்டிரம், தமிழகம், மேற்கு வங்கம், கா்நாடகம் போன்ற பெரிய மாநிலங்களில் ஜிஎஸ்டி வசூல் 17 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதேநேரம், குஜராத், ஆந்திரம், தெலங்கானா போன்ற பிற பெரிய மாநிலங்களில் 6 சதவீதம் வரையிலான அதிகரிப்பே பதிவாகியுள்ளது. மத்திய பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் 10 சதவீதம் என்ற நடுத்தரமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஜிஎஸ்டி வசூலில் தேசிய அளவிலான சராசரி அதிகரிப்பு, மாநிலங்களுக்கு இடையே சீராக பிரதிபலிக்கவில்லை. எனவே, துறைகள்தோறும் ஆழமான தரவுகளின் அடிப்படையில் முழுமையான பகுப்பாய்வு அவசியம்’ என்று அவா்கள் தெரிவித்தனா்.

நாட்டில் ஒரு சில மாநில வரிகள் தவிர பிற மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து சரக்கு-சேவை வரி கடந்த 2017, ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது.

மே மாத ஜிஎஸ்டி வருவாய்

மத்திய ஜிஎஸ்டி ரூ.35,434 கோடி

மாநில ஜிஎஸ்டி ரூ.43,902 கோடி

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.1.09 லட்சம் கோடி

கூடுதல் வரி ரூ.12,879 கோடி

மொத்தம் ரூ.2.01 லட்சம் கோடி

Read More

Previous Post

நான்கு தலைமுறை வசிப்பிடத்தை இழந்த டெல்லி தமிழர்கள்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Next Post

161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வர்த்தமானி வெளியீடு

Next Post
161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வர்த்தமானி வெளியீடு

161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வர்த்தமானி வெளியீடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin