கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறை வரவுள்ளதால் விமானங்களில் முன்பதிவு அதிகரித்துள்ளது. இதனால் சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற உள்நாட்டு விமானங்கள் மற்றும் சிங்கப்பூர், தாய்லாந்து, துபாய் ஆகிய சர்வதேச விமானங்களில் டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னை- மதுரை இடையே வழக்கமாக 4,300 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 17,695 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சென்னையில் இருந்து திருச்சிக்கான கட்டணம் 14,387 ரூபாயாகவும், கோவைக்கான கட்டணம் 9,418 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
சென்னை – கொச்சி இடையிலான விமான கட்டணம் வழக்கத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளது.
சென்னை- தாய்லாந்து இடையே வழக்கமாக 8,891 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 17,437 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கட்டணம் அதிகரித்தாலும், பல விமானங்களில் டிக்கெட்கள் முழுமையாக முன்பதிவாகியுள்ளன.
.
&w=750&resize=750,375&ssl=1)
