Last Updated:
பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5வது கடற்படை தளத்தை தாக்கி அழித்த ஈரான், குடியிருப்பு பகுதிகளிலும் குண்டு மழை பொழிந்ததால் மக்கள் பீதிக்குள்ளாகினர்.
ஈரானில் நடத்திய வான்வழித் தாக்குதலில் பஹ்ரைனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் உருக்குலைந்தன.
அணு ஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் அடுத்தடுத்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் நட்பு நாடுகளான பஹ்ரைன், துபாய், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. சவுதி, பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 14 அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கி அழித்ததாகவும் 100க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்று குவித்ததாகவும் ஈரான் அறிவித்துள்ளது.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5வது கடற்படை தளத்தை தாக்கி அழித்த ஈரான், குடியிருப்பு பகுதிகளிலும் குண்டு மழை பொழிந்ததால் மக்கள் பீதிக்குள்ளாகினர்.
ஈரான் வீசிய ஏவுகணை வெடித்துச் சிதறியதில் உயிரைக் காக்க மக்கள் பதறியடித்து ஓடினர்.

