Last Updated:
2026-ம் ஆண்டில் இதுவரை 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் சர்மா, அதில் 5 முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.
டி20 கிரிக்கெட் போட்டிகளில் உலகின் நம்பர் பேட்ஸ்மேனாக இருக்கும் அபிஷேக் சர்மா இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து 3 ஆவது முறையாக டக் அவுட் ஆகி மோசமான சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
இன்று நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மேட்ச்சில் 3 பந்துகளை எதிர்கொண்ட அபிஷேக் சர்மா ஆர்யன் தத் வீசிய பந்தில் போல்டாகி வெளியேறினார்.
முன்னதாக அவர் மும்பையில் கடந்த 7 ஆ தேதி அமெரிக்காவுக்கு எதிராக நடந்த போட்டியிலும்,15 ஆம் தேதி கொழும்புவில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் டக் அவுட் ஆகியிருந்தார்.
இந்த மோசமான ரிக்கார்டின் மூலம் அபிஷேக் சர்மா உகாண்டா நாட்டின் ரோஜர் முகாசாவுடன் இணைந்திருக்கிறார். 2024 உலகக்கோப்பை தொடரின்போது முகாசா தொடர்ந்து 3 போட்டிகளில் டக் அவுட் ஆகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2026-ம் ஆண்டில் இதுவரை 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் சர்மா, அதில் 5 முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். இதன் மூலம் 2024-ல் சஞ்சு சாம்சன் ஏற்படுத்திய ஓர் ஆண்டில் 5 டக் அவுட்கள் என்கிற மோசமான சாதனையை இவர் சமன் செய்துள்ளார்.
Feb 18, 2026 10:54 PM IST


