சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த ஜூன் 15 ஆம் தேதி அன்று ஒரு சவரன் ரூ.74,560 என்ற வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.

