Last Updated:
தேசிய பங்கு சந்தை குறியீட்டான நிஃப்டி, 190 புள்ளிகள் உயர்ந்து 26 ஆயிரத்து 190 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது.
தொடர்ந்து 10 ஆவது ஆண்டாக, ஆண்டின் இறுதி நாளில் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் ஆன சென்செக்ஸ், ஆண்டின் கடைசி நாளில் 84 ஆயிரத்து 794 புள்ளிகளுடன் தொடங்கி தொடர்ந்து ஏறுமுகமாக இருந்தது. வர்த்தக நேர முடிவில், 546 புள்ளிகள் உயர்வடைந்து, 85 ஆயிரத்து 220 புள்ளிகளில் நிலைபெற்றது.
குறிப்பாக, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்ஸ், டாடா ஸ்டீல்ஸ், ஓ.என்.ஜி.சி., இன்ஃபோசிஸ், சன் ஃபார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. அதேபோன்று, தேசிய பங்கு சந்தை குறியீட்டான நிஃப்டி, 190 புள்ளிகள் உயர்ந்து 26 ஆயிரத்து 190 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது.
5 நாட்களுக்கு பிறகு இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்து, 2025 ஆம் ஆண்டை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்துள்ளன. மேலும், தொடர்ந்து 10 ஆண்டுகள், ஆண்டின் இறுதி நாளில் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Mumbai,Maharashtra


