Last Updated:
ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, விலைவாசி பல மடங்கு அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்து அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து போராடுங்கள், உங்களுக்கான உதவி வந்து கொண்டே இருக்கிறது என, ஈரானில் போராடும் மக்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள அழைப்பு உலக அரசியலில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது.
ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, விலைவாசி பல மடங்கு அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்து அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானின் உச்சபட்ச தலைவர் கமேனிக்கு எதிராக பெரும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. அரசுக்கு சொந்தமான கட்டடங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டங்களின் போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சூழ்நிலையில் தனது ட்ரூத் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், தொடர்ந்து போராடுங்கள், உங்களுக்கான உதவி வந்து கொண்டே இருக்கிறது என, ஈரானில் போராடும் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். முக்கிய அமைப்புகளை கைப்பற்றுங்கள் எனவும் அவர் போராட்டகாரர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
இதுதவிர போராட்டம் தொடர்பாக ஈரான் அரசு அதிகாரிகளுடன் நடத்தவிருந்த அனைத்து பேச்சுவார்த்தைகளையும் ரத்து செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். வெனிசுலாவின் அதிபர் பொறுப்பையும் ஏற்பதாக அண்மையில் அறிவித்த டிரம்ப், ஈரான் விவகாரத்திலும் தலையிடுவது, சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Jan 14, 2026 10:06 AM IST
“தொடர்ந்து போராடுங்கள், உங்களுக்கான உதவி வந்து கொண்டே இருக்கிறது” ஈரான் மக்களுக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு


