சென்னை: சென்னையில் நேற்று (அக்.22) ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை குறைந்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், இன்றும் (அக்.23) தங்கம், வெள்ளி விலை குறைந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக, தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு மொத்தமாக ரூ.3680 குறைந்து, ஒரு பவுன் ரூ.92,320-க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று, 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.11,500-க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு பவுன் ரூ.92,000-க்கும், விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் மீதான முதலீடு குறைந்ததன் எதிரொலியாக அதன் விலை சரிவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தங்கம் விலை போலவே வெள்ளி விலையும் குறைந்து வருகிறது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.174-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,74,000-க்கும் விற்பனையாகிறது.