இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை 2–1 என வென்றது.
பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற போட்டியில் 264 ஓட்ட வெற்றி இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணிக்காக பிரன்டன் கிங் (102) மற்றும் கீசி கார்டி (ஆட்டமிழக்காது 128) அபார சதம் பெற்றதோடு இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டுக்கு 209 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டது மேற்கிற்திய தீவுகள் அணியின் இலகு வெற்றிக்கு உதவியது.
அந்த அணி 43 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 267 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களுக்கே முதல் 4 விக்கெட்டுகளை இழந்ததோடு ஆரம்ப வீரர் பில் சோல்ட் (74) மற்றும் மத்திய பின் வரிசையில் சாம் கரன் (40), டான் மௌஸ்லி (57) ஆகியோரின் சிறப்பாட்டத்ததால் இங்கிலாந்து அணியால் 263 ஓட்டங்களை சேகரிக்க முடிந்தது.
அடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை (10) ஆரம்பமாகவுள்ளது.
The post தொடரை வென்றது மேற்கிந்திய அணி appeared first on Thinakaran.
