ஹபரதுவையில் உள்ளதொடருந்து கடவையில்,இன்று(25) பேருந்து ஒன்று தொடருந்துடன் மோதியதில் ஆறு பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து நண்பகல் வேளையில் கொக்கலையில் உள்ள மார்ட்டின் விக்கிரமசிங்க அருங்காட்சியகத்திற்கு அருகில் நிகழ்ந்தது.
காயமடைந்த ஆறு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்து நேரிட்ட சூழல் குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

