Last Updated:
Flower Prices Increased| சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு.
தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு. தை மாதம் கடைசி முகூர்த்தம் என்பதால் தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. தொடர்ந்து இரண்டு நாட்கள் (16.02.2025, 17.02.2025) சுபமுகூர்த்தம் காரணமாக பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
மேலும் மல்லிகைப்பூ சீசன் முடிந்துவிட்டதால் மல்லிகை பூ வரத்து குறைந்து காணப்படுகிறது. அதனால் மல்லிகைப்பூவின் விலை உயர்ந்து காணப்படுகிறது. தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பூக்களானது செட்டிலம்பட்டி, ஓட்டப்பிடாரம், பேரூரணி, குலசைநல்லூர், ஆரக்குளம், புதியம்புத்தூர், ஓசனூத்து, சேவக்குளம், மணியாச்சி போன்ற சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து இங்கு விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது.
மேலும் பிச்சிப்பூ ஆனது திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி மார்க்கெட்டிற்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்கள் விலை நிலவரம் “மல்லிகைப்பூ கிலோ 2500 ரூபாய் வரை விற்பனை ஆகின்றது.
பிச்சிப்பூ கிலோ 1750 ரூபாய் வரை விற்பனை ஆகின்றது, சென்ட் பூ கிலோ 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது, பன்னீர் ரோஜா கிலோ 100 ரூபாய், பட்டன் ரோஜா கிலோ 200 ரூபாய், செவ்வந்தி பூ கிலோ 150 ரூபாய்க்கும் மேலும் கனகாம்பரம் கிலோ 2400 ரூபாய் வரை விற்பனையாகின்றது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Thoothukkudi,Tamil Nadu
February 15, 2025 5:04 PM IST

