வியாழக்கிழமை நிலவரத்தின்படி ,நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 71பேர் வெளிநாட்டவர்கள்.இதில் சிங்கபூரர்களும் அடங்குவர். அதில் 2 பேருக்கு லேசான காயம் அடைந்தனர்.
தைபேயில் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. உதவி மற்றும் ஆதரவுக்காக தைவான் அதிகாரிகளுக்கு நாங்கள் பாராட்டுக்களை தெரிவிக்கிறோம்.
புதன்கிழமை ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
இன்னும் 3 மூன்று வெளிநாட்டவர்கள் உட்பட 12 பேர் காணவில்லை, அவர்களை தேடும் பணியில் உள்ளனர். மீட்பு பணியின் போது நிலச்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குயிங் மிங் கிராமங்களில் நிலச்சரிவுகள் அல்லது பாறைகள் விழும் அபாயம் இருப்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.