Last Updated:
AI மற்றும் டீப்ஃபேக் போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசியல் தலைவர்கள் பேசாத விஷயங்களைப் பேசியது போல போலியாக வீடியோக்களை உருவாக்கிப் பரப்புகின்றனர்.
தைவான் நாட்டின் உயர்மட்ட உளவு அமைப்பு, சீனா தங்களுக்கு எதிராக ‘அறிவாற்றல் போர்’ (Cognitive Warfare) என்ற புதிய உத்தியைக் கையாண்டு வருவதாக எச்சரித்துள்ளது.
சீனா நூற்றுக்கணக்கான போலி செய்தி இணையதளங்களையும், தானியங்கி கணினி மென்பொருள்களான ‘பாட்’ (Bot) நெட்வொர்க்குகளையும் பயன்படுத்தி வருகிறது. இவை தைவான் அரசுக்கு எதிராகத் தவறான தகவல்களைப் பரப்பப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த போரானது தைவானுக்கு எதிராக நேரடியாக ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்படும் போர் அல்ல. மாறாக, மக்களின் சிந்தனை, உணர்ச்சிகள் மற்றும் மனநிலையைக் குறிவைத்து நடத்தப்படும் போர். தவறான தகவல்களையும், பொய்ப் பிரச்சாரங்களையும் தொடர்ச்சியாகப் பரப்புவதன் மூலம் மக்களிடையே குழப்பத்தையும், அரசு மீது நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.
தைவானின் தேசிய பாதுகாப்பு பணியகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2024-2025 காலகட்டத்தில் சீனாவிடமிருந்து வரும் இத்தகைய தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. குறிப்பாக, பேஸ்புக், டிக்டாக் மற்றும் X (ட்விட்டர்) போன்ற சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலம் விஷமத்தனமான கருத்துகள் பரப்பப்படுகின்றன.
AI மற்றும் டீப்ஃபேக் போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசியல் தலைவர்கள் பேசாத விஷயங்களைப் பேசியது போல போலியாக வீடியோக்களை உருவாக்கிப் பரப்புகின்றனர்.
மக்களின் விருப்பங்கள் மற்றும் செயல்பாடுகளை ஆராய்ந்து, அவர்களுக்கு ஏற்றவாறு மனமாற்றத்தை ஏற்படுத்தும் தகவல்களை ஆட்டோ மேட்டிக்காக அனுப்புகின்றனர்.


