தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி
புகைப்படங்களை எடுத்த இரு இளைஞர்களை பலாலி பொலிஸார்
கைது செய்துள்ளனர்.
வெசாக் தினத்தினை முன்னிட்டு , விசேட வழிபாடுகள் தையிட்டி
விகாரையில் நடைபெற்று வரும் நிலையில் , விகாரைக்கு சற்று தொலைவில் , காணி
உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
கைது
இந்நிலையில் வடமராட்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் , விகாரைக்கு செல்வதாக
கூறி விகாரை பகுதிக்கு சென்று , அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி
புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.
அதனை அவதானித்த பொலிஸார் இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த வேளை முன்னுக்கு
பின் முரணான தகவல்களை வழங்கியதை அடுத்து , இருவரையும் கைது செய்து பலாலி
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
