தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகள் எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இதன்படி குறித்த காணிகள் அளவீடு செய்து காணி உரிமையாளர்களை உறுதி செய்த பின், மிகவிரைவில் அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

