கோலாலம்பூர், ஜனவரி 30:
பிப்ரவரி 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து பத்துமலைக்குச் செல்லும் ரத ஊர்வலத்திற்காகக் கோலாலம்பூரின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இன்று (வெள்ளிக்கிழமை – ஜனவரி 30) இரவு 9.00 மணி முதல் பிப்ரவரி 2 (செவ்வாய்க்கிழமை) வரை கட்டம் கட்டமாகச் சாலைகள் மூடப்படும்.
ஜாலான் லெபோ அம்பாங் / ஜாலான் பேராக் (Jalan Leboh Ampang/Jalan Perak), ஜாலான் துன் பேராக் / ஜாலான் புடு (Jalan Tun Perak/Jalan Pudu), ஜாலான் துன் டான் செங் லொக் / ஜாலான் சுல்தான், ஜாலான் சுல்தான் / ஜாலான் ஹேங் ஜெபாட், ஜாலான் சுல்தான் / ஜாலான் பெட்டாலிங், ஜாலான் சுல்தான் / ஜாலான் துன் எச்.எஸ். லீ (Jalan Tun H.S. Lee), ஜாலான் முன்ஷி அப்துல்லா / ஜாலான் டாங் வாங்கி, ஜாலான் ராஜா லாவுட் / ஜாலான் சுல்தான் இஸ்மாயில் ஆகிய சாலைகள் கட்டம் கட்டமாகச் சாலைகள் மூடப்படும்.
இன்று இரவு 9.00 மணிக்கு ஜாலான் துன் எச்.எஸ். லீ-யிலிருந்து புறப்பட்டு பத்துமலை நோக்கிச் செல்லும். பிப்ரவரி 2-ஆம் தேதி மாலை 3.00 மணிக்கு பத்துமலையிலிருந்து புறப்பட்டு, பிப்ரவரி 3-ஆம் தேதி அதிகாலை 4.00 மணியளவில் மீண்டும் மாரியம்மன் ஆலயத்தைச் சென்றடையும்.
கோலாலம்பூர் போக்குவரத்துப் புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவு (JSPT) தலைவர் ஏசிபி முகமட் ஜம்சுரி முகமட் ஈசா கூறுகையில்: பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். போக்குவரத்துப் போலீசாரின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து, மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முடிந்தவரை கேடிஎம் (KTM) கொமுட்டர் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது சிறந்தது.
The post தைப்பூசம் 2026: கோலாலம்பூரில் 12 முக்கிய சாலைகள் மூடல்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

