தைப்பிங்,
ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 3 வரை தைப்பிங் Tekah Airport இல் நடைபெற உள்ள ‘Air Festival 2.0 ‘ விற்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 50,000 பேர் வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த ஆண்டின் மிகப்பெரிய விமானத் Festival களில் முக்கியமானதொன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த Festival இந்த முக்கிய நோக்கங்களில் ஒன்று, பள்ளி மாணவர்களுக்கு விமானத்துறை குறித்து ஆரம்பத்திலேயே விழிப்புணர்வு அளிப்பதாகும். 500 மாணவர்கள் விமானப் பொறியியல் மற்றும் பைலட் சேவைகள் குறித்து நடத்தப்படும் உரையாடல்களில் பங்கேற்க உள்ளனர். மேலும், பறக்கும் அனுபவம் பெறும் வகையில் Microlight மற்றும் Cessna 172 விமானங்களில் பயணிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும்.
Viper, Cessna Caravan, Mooney, Gyrocopter போன்ற 10-க்கும் மேற்பட்ட வகையான விமானங்கள் கண்காட்சிக்காக வைக்கப்படவுள்ளது. மாணவர்களுக்காக காகித விமானப் போட்டி, விமானக் கலையோவியம் மற்றும் நிறமிடும் போட்டிகள் நடைபெறுகின்றன. இது மாணவர்களுக்கு ஓர் இனிமையான அனுபவமாக அமையவுள்ளது.
இந்த விழாவில் 100-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (SME) பங்கேற்று, உணவு, உடை மற்றும் பிற தயாரிப்புகளை விற்பனை செய்ய உள்ளனர். இது சுற்றுலா வளர்ச்சி திட்டமான ‘Perak Sejahtera 2030’ மற்றும் ‘மலேசியா வருகை ஆண்டு 2026’ திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.