Last Updated:
பீகாரில் ஒரு மாணவி தேர்வு நடந்த வளாகத்தின் கேட்டின் கீழ் நுழைந்து வளாகத்திற்குள் நுழைவதற்கு முற்பட்டார்.
தேர்வு விதிகளின்படி, தேர்வெழுதும் மாணவ, மாணவிகள், அரை மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு மையத்திற்குள் நுழைய வேண்டும், இல்லையெனில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், பல மாணவர்களும் தேர்வுக்கு தாமதமாக வந்தனர். அதன் காரணமாக அவர்கள் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படாமல், திருப்பி அனுப்பட்டனர். அப்போது சில மாணவர்கள் திரும்பி சென்றதும், சில மாணவர்கள் தங்களை தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி நிகழ்வும் நடைபெற்றது.
அந்த சமயம் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு மாணவி தேர்வு நடந்த வளாகத்தின் கேட்டின் கீழ் நுழைந்து வளாகத்திற்குள் நுழைவதற்கு முற்பட்டார். இதனை அங்கிருந்த சிலர் வீடியோ பதிவு செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு கீழ் அந்த மாணவிக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
February 03, 2025 5:09 PM IST