
டாலரீக்கோ, தோசைக் கல்லில் தோசை வார்த்தார். பிறகு அதில் மசாலாவை வைத்து தோசையைச் சுருட்டினார். அவருடைய செயல் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.
அமெரிக்காவில் இடைத்தேர்தல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. டெக்சஸ் மாநிலத்தில் செனட் (Senate) தேர்தல் சூடுபிடிக்கிறது.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜேம்ஸ் டாலரீக்கோ (James Talarico) இந்திய உணவகத்தில் தோசை சுட்டார்.
அந்த வீடியோ இணையத்தில் பரவியிருக்கிறது.
டாலரீக்கோ, தோசைக் கல்லில் தோசை வார்த்தார். பிறகு அதில் மசாலாவை வைத்து தோசையைச் சுருட்டினார். அவருடைய செயல் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.
இந்தியக் கலாசாரத்தைப் பற்றி அறிந்து நல்லவிதமாக டாலரீக்கோ காட்டியிருக்கிறார் என்று பலர் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டனர்.
முதல் முறை தோசை சுடுவது எப்போதும் சிரமமாகத்தான் இருக்கும் என்றும் பலர் நகைச்சுவையாகப் பதிவிட்டனர்.
வேறு சிலர், முதல் முறையே அவர் பிரமாதமாகத் தோசை சுட்டதாகப் பாராட்டினர்.
அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராக இனவாதம் அதிகரித்து வரும் வேளையில் டாலரீக்கோவின் செயலுக்குப் பாராட்டுக் குவிகிறது.
இந்தியர்களை உள்ளடக்கும் வகையில் டாலரீக்கோ அவருடைய தேர்தல் பிரசாரத்தை நடத்தியிருப்பதாக இந்திய-அமெரிக்கச் சமூகத் தலைவர்கள் குறிப்பிட்டனர்.

