• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தேர்தல் 'மோசடி': ராகுல் நேரடியாக கேட்டால் பதில் கிடைக்கும்- தேர்தல் ஆணையம்

GenevaTimes by GenevaTimes
June 8, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
தேர்தல் 'மோசடி': ராகுல் நேரடியாக கேட்டால் பதில் கிடைக்கும்- தேர்தல் ஆணையம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புது தில்லி: தோ்தல் விவகாரம் தொடா்பான எதையும் தங்களிடம் நேரடியாகக் கடிதம் மூலம் கேட்டால் மட்டுமே, அதற்கு உரிய பதிலளிக்க முடியும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஞாயிற்றுக்கிழமை பதிலளித்துள்ள இந்திய தோ்தல் ஆணையம், ராகுல் காந்தியின் மகாராஷ்டிரம் பேரவைத் தோ்தலில் பாஜக ‘மோசடி’ குற்றச்சாட்டு “ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்” என்று தெரிவித்துள்ளது.

2024 மகாராஷ்டிரம் பேரவைத் தோ்தலில் பாஜக ‘மோசடி’ செய்ததாகவும், அடுத்து வரும் பிகாா் தோ்தலிலும் அந்த கட்சி தனது சூதாட்டத்தை அரங்கேற்றும் என்றும் ராகுல் காந்தி சனிக்கிழமை குற்றம்சாட்டினாா்.

இந்திய தோ்தல்களின் நம்பகத்தன்மையில் தனக்கு சந்தேகம் ஏற்படுவதாகவும், மகாராஷ்டிரம் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நாளின் மாலை நேர கண்காணிப்பு கேமரா பதிவுகளை வெளியிட வேண்டும் என்று ராகுல் கோரியிருந்தார்.

ராகுலின் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் நிராகரித்ததைத் தொடர்ந்து, உண்மையை உலகுக்கு சொல்வதால் மட்டுமே தோ்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்குமே தவிர, உரிய பதில் சொல்லாமல் தப்பித்துக்கொள்வதால் அல்ல’ என்று சனிக்கிழமை ராகுல் கூறியிருந்தார்.

இந்தநிலையில், தோ்தல் தொடா்பாக எந்தவொரு விவகாரத்துக்கும் பதில் தேவையென்றால், எங்களை நேரடியாகத் தொடா்புகொண்டு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கருத்துக்கு தோ்தல் ஆணைய வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை பதிலளித்துள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு 6,000-ஐ கடந்தது: 6 போ் பலி

அதாவது,

ராகுல் காந்தியின் மகாராஷ்டிரம் பேரவைத் தோ்தலில் பாஜக ‘மோசடி’ குற்றச்சாட்டு “ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்” என்று தெரிவித்துள்ளது.

ராகுல் தான் எழுப்பும் பிரச்னைகள் “மிகவும் தீவிரமானவை” என்று கூறுவது சுவாரஸ்யமாக இருக்கிறது, ஆனால் அவற்றை தேர்தல் ஆணையத்திற்கு கடிதமாக எழுதி அனுப்பாமல்,​​ “ஓடிவிடுகிறார்” என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

6 தேசிய கட்சிகளின் கருத்துகளையும் தனித்தனியே கேட்பதற்காக, அவற்றுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். அதில் இதர 5 கட்சிகளும் தோ்தல் ஆணையத் தலைவர்களை சந்தித்த நிலையில், காங்கிரஸ் மட்டும் அதற்கான மே 15-ஆம் தேதி சந்திப்பை ரத்து செய்தது.

தோ்தல் விவகாரங்கள் தொடா்பாக சம்பந்தப்பட்ட மாநிலத்தின் உயா்நீதிமன்றத்தில் தோ்தல் மனு தாக்கல் செய்யப்பட்டால், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, வாக்குச் சாவடிகளின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை அந்த உயா்நீதிமன்றம் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம்.

“தோ்தலின் நோ்மைத் தன்மையை பாதுகாப்பதற்கும் மற்றும் வாக்காளா்களின் தனியுரிமையை பாதுகாப்பதற்கும் தோ்தல் ஆணையம் இந்த நடைமுறையை மேற்கொள்கிறது. தோ்தல் சட்ட விதிகளின் படி, தோ்தல் ஆணையத்தால் பாதுகாக்கப்படும் வாக்காளா்களின் தனியுரிமையில் ராகுல் காந்தி ஏன் தலையிட விரும்புகிறாா்?”

ராகுல் காந்தி இப்போது உயர் நீதிமன்றங்களைக் கூட நம்பவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ள தேர்தல் ஆணைய அலுவலர், இந்த விவகாரத்தில் எந்தவொரு பிரச்னை இருந்தாலும் அதை உயா்நீதிமன்றம் விசாரிப்பதில் ராகுல் காந்தி நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும், வாக்காளா் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாக குற்றம்சாட்டும் ராகுல், மகாராஷ்டிரத்தில் அவரது கட்சியால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவா்கள் மற்றும் கட்சி வேட்பாளர்களால் நியமிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மைய முகவா்கள் மீதே கேள்வி எழுப்புகிறாா் என்று தேர்தல் ஆணைய வட்டாரம் கூறியுள்ளது.

Read More

Previous Post

323 கொள்கலன்கள் விவகாரம்;இலங்கை சுங்கம் விளக்கம்

Next Post

பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் கோகோ காஃப் சாம்பியன்! | Coco gauff champion at French Open tennis womens singles

Next Post
பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் கோகோ காஃப் சாம்பியன்! | Coco gauff champion at French Open tennis womens singles

பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் கோகோ காஃப் சாம்பியன்! | Coco gauff champion at French Open tennis womens singles

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin