Last Updated:
பாட்னாவில் பாஜகவினர் 501 கிலோ லட்டு தயாரித்து, என்.டி.ஏ. கூட்டணி வெற்றிக்காக கொண்டாட தயாராகி வருகின்றனர்.
பிகார் மாநிலத்திற்கான 243 தொகுதிகளுக்கு கடந்த 6 மற்றும் 11 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டு கட்ட வாக்குப்பதிவிலும் மொத்தம் 66.91% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 73 ஆண்டு கால பிகார் வரலாற்றில் இல்லாத அளவிற்கான அதிகப்படியான வாக்குப்பதிவு சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அதில் பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகள் என்.டி.ஏ. கூட்டணி அதிக தொகுதிகளை வென்று ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிகார் மாநிலத்திற்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம் (14ஆம் தேதி) நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்தச் சூழலில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பான்மையானவை என்.டி.ஏ. கூட்டணி அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் என சொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தற்போதே பாஜகவினர் பிகார் தேர்தல் வெற்றியைக் கொண்டாட தயாராகிவருகின்றனர். அதன்படி, பிகார் மாநில தலைநகர் பாட்னாவில், பாஜகவினர் மொத்தம் 501 கிலோ லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதேபோல், என்.டி.ஏ. கூட்டணியில் இருக்கும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் வேட்பாளர் அனந்த் குமார் சிங் இல்லத்தில் அக்கட்சியினர் பந்தல் அமைத்து, இருக்கைகள் போடுவது, அலங்காரங்கள் செய்வது என மும்முரமாக தயாராகிவருகின்றனர்.
November 12, 2025 2:53 PM IST
தேர்தல் முடிவுக்கு முன்பே வெற்றியை கொண்டாட தயாராகி வரும் பாஜகவினர்! பாட்னாவில் மும்முர ஏற்பாடுகள்


