நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை எப்போது வெளியிடலாம் என்பதை பார்க்கலாம்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 7ஆம் கட்டத் தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன்பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடலாம். அதாவது, தேர்தல் முடிந்தவுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள், வெற்றியாளர்கள் குறித்த கணிப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் முடிவுகள் குறித்த தகவல்களை வெளியிடலாம்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு அனைத்தும் நிறைவடைந்த பின்னர், கணக்கெடுப்பு நிறுவனங்கள் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் மற்றும் உணர்வுகளை பெற்று, கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடுகின்றன. நாடு எந்த திசையில் பயணிக்கிறது? எந்த அரசியல் கட்சித் தலைவர் பெரும்பான்மை பெறுவார் போன்றவற்றை தெரிந்து கொள்வதற்கான ஒரு திசை காட்டியாக இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் இருக்கும். இருப்பினும், ஒரு சில நேரங்களில் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தவறாகவும் போய்விடுகின்றன.
இதையும் படிக்க:
ஜூன் 2 மீண்டும் சிறை செல்லும் அரவிந்த் கெஜ்ரிவால்!
ஜூன் 1ஆம் தேதி மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில், 6.30 மணியில் இருந்து கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகும்.
ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கும். கருத்துக் கணிப்புகள் எவ்வளவு துல்லியமாக வெளிவந்தன என்பதை, வாக்கு எண்ணிக்கை நாளன்று பிற்பகலுக்குள் தெரிந்து விடும். வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக முடிவடைந்த பின்னர், தேர்தல் முடிவுகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.
தேர்தலுக்கு பிந்தையை கருத்துக் கணிப்பு முடிவுகளை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியிலும் இணையதளத்திலும், உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
.
&w=750&resize=750,375&ssl=1)
