• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தேர்தலில் தமிழ் தேசியத்தை வைத்து வியாபாரம் செய்பவர்கள் தோல்வி – சி.வி.விக்கினேஸ்வரன்

GenevaTimes by GenevaTimes
November 24, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தேர்தலில் தமிழ் தேசியத்தை வைத்து வியாபாரம் செய்பவர்கள் தோல்வி – சி.வி.விக்கினேஸ்வரன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தமிழ்த்தேசமும், தமிழ்த்தேசியமும் அழியவில்லை என தமிழ்த்தேசிய மக்கள் கூட்டணியின் தலைவரும், முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியத்தைத் தமிழ் மக்கள் கைவிட்டுவிடவில்லை என சி.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்

ஊடகம் ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்திருக்கும் பதிலிலேயே சி.வி.விக்கினேஸ்வரன் (C.V.Wigneswaran) மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழீழத்தைப் பெறவேண்டிய அவசியம் இல்லை



அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

தமிழீழம் பெறமுடியாமல் போய்விடுமா என்று பிரபாகரனிடம் ஒருவர் கேட்டார். அதற்கு அவர் ‘தமிழீழத்தைப் பெறவேண்டிய அவசியம் இல்லை. அது ஏற்கனவே இருக்கிறது. அதனைப் பாதுகாப்பதற்காகத் தான் நாங்கள் போராடுகின்றோம்

தேர்தலில் தமிழ் தேசியத்தை வைத்து வியாபாரம் செய்பவர்கள் தோல்வி - சி.வி.விக்கினேஸ்வரன் | C V Wigneswaran Interview



அதேபோன்று தமிழ்த்தேசம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. அதனைப் பாதுகாக்கும் மனோநிலையே தமிழ்த்தேசியம். அது அழிந்துவிடவில்லை. தேர்தலின் பின்னர் தமிழ்த்தேசத் தெருக்கள் பலவற்றில் இராணுவத்தடைகள் நீக்கப்பட்டதைப் பார்த்திருப்பீர்கள்.



ஒரே நாட்டுக்குள் தமிழ் பேசும் பிரதேசங்களில் மாத்திரம் ஏன் இந்தப் பாகுபாடு எனும் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.

வட, கிழக்கு மாகாணங்கள் தமிழ்மொழி பேசும் பிரதேசங்கள் என்ற உண்மையை உணர்ந்து செயலாற்றுபவர்களை தமிழ்த்தேசியத்தை அழிப்பவர்கள் என்று அடையாளம் காட்டமுடியாது.

தமிழ்த்தேசிய வைத்து வியாபாரம்


தமிழ்த்தேசிய சிந்தனையை வைத்து வியாபாரம் நடத்தியவர்கள் தேர்தலில் காணாமல்போயிருக்கிறார்கள். தமிழ்த்தேசிய சிந்தனையை ஏளனம் செய்து, கட்சிகளைப் பிரித்து சுயநல அரசியல் நடத்திய ஒருவர் காணாமல் போயிருக்கிறார்.

தேர்தலில் தமிழ் தேசியத்தை வைத்து வியாபாரம் செய்பவர்கள் தோல்வி - சி.வி.விக்கினேஸ்வரன் | C V Wigneswaran Interview


இருப்பினும் நடைபெற்று முடிந்த தேர்தலில் வட , கிழக்கில் அரசாங்கம் ஆசனங்களைப் பெற்றிருப்பதே உங்களது கேள்விக்குக் காரணமாக இருக்கிறது. ஆனால் இந்தத் தேர்தல் முடிவுகள் எமக்கு இறைவனால் தரப்பட்ட வரப்பிரசாதமாகும்.



கடந்த காலங்களில் தமிழ்த்தேசியத்தை ஆதரித்தவர்கள் இன்னமும் தமிழ்த்தேசியத்துடன் தான் இருக்கிறார்கள்.

இருப்பினும் பல சுயேட்சைக்குழுக்களின் தோற்றம் மற்றும் பல வருடகால அரசியல் கட்சிகள் தேர்தல் உடன்பாடுகளுக்கு இடம்கொடுக்காமை போன்றவற்றால் அவர்கள் செய்வதறியாது பிரிந்துநின்று வாக்களித்திருக்கிறார்கள்.

மக்களின் ஆதரவு குறையவில்லை

அதேவேளை தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தும் கட்சிகளுக்குக் கிடைத்திருக்கும் வாக்குகளின் மொத்தத்தொகையைப் பார்த்தால், தமிழ்த்தேசியத்துக்கான எமது மக்களின் ஆதரவு குறையவில்லை என்ற விடயமே புலனாகிறது.

தேர்தலில் தமிழ் தேசியத்தை வைத்து வியாபாரம் செய்பவர்கள் தோல்வி - சி.வி.விக்கினேஸ்வரன் | C V Wigneswaran Interview

ஆகவே தமிழ்த்தேசமும், தமிழ்த்தேசியமும் அழியவில்லை. மாறாக தமிழ்த்தேசியத்தை ஆதரித்தோர் தம்முள் பிரிந்துநின்று அரசாங்கத்தை வெற்றியடையச்செய்திருக்கிறார்களே தவிர, தமிழ்த்தேசியத்தைத் தமிழ் மக்கள் கைவிட்டுவிடவில்லை.



அதேவேளை ஐ.நா சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் உறுப்புரை ஒன்றின்கீழ் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்கள் தமிழ்த்தேசம் என்பதை எந்தவொரு இலங்கை அரசாங்கமும் ஏற்காதவரை, வட, கிழக்கு தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 

Read More

Previous Post

இலங்கைக்கு மூன்றாவது தவணை கடனுதவி: IMF ஒப்புதல் | Makkal Osai

Next Post

தோல்வி டூ மெகா வெற்றி… 6 மாதங்களில் களத்தை மாற்றியமைத்த பாஜக.. எப்படி சாத்தியமானது? – News18 தமிழ்

Next Post
தோல்வி டூ மெகா வெற்றி… 6 மாதங்களில் களத்தை மாற்றியமைத்த பாஜக.. எப்படி சாத்தியமானது? – News18 தமிழ்

தோல்வி டூ மெகா வெற்றி... 6 மாதங்களில் களத்தை மாற்றியமைத்த பாஜக.. எப்படி சாத்தியமானது? – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin