தேனியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் பெரியகுளம் பாப் அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் தேனி எல்.எஸ் மில் அணியை 95க்கு 90 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற பெரியகுளம் பாப் அணி.
தேனியில் எல்.எஸ் மில் கூடை பந்தாட்ட கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு மாவட்ட அளவிலான கூடை பந்தாட்ட போட்டி கடந்த 28ஆம் தேதி தொடங்கி விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. தேனி தனியார் பள்ளியில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் சுமார் 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு லீக் மற்றும் நாக் அவுட் சுற்று முறைகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
லீக் மற்றும் நாக்அவுட் சுற்றுகளில் வெற்றி பெற்ற தேனி எல்.எஸ் மில் அணி மற்றும் பெரியகுளம் பாப் அணிகள் இறுதிப்போட்டியில் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் தேனி எல் எஸ் மில் அணியை 95க்கு 90 என்ற புள்ளி கணக்கில் பெரியகுளம் பாப் அணியினர் வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றனர்.
இதையும் வாசிக்க: சர்ருன்னு குறைந்த மீன் விலை… ஒரு கிலோ வஞ்சிரம் எவ்வளவு தெரியுமா?
வெற்றி பெற்று முதலிடம் பிடித்த பெரியகுளம் பாப் அணிக்கு 20,000 ரூபாய் பரிசு தொகையும் மற்றும் வெற்றிக்கான கோப்பை வழங்கப்பட்டது. பின்னர் இரண்டாம் இடம் பிடித்த தேனி எல்.எஸ் மில் அணிக்கும் மூன்றாம் இடம் பிடித்த கம்பம் பென்னிகுயிக் அணிக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
மேலும் கூடைப்பந்தாட்ட போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு தனித் தனியே பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் மற்றும் எல்.எஸ் மில் கூடை பந்தாட்ட கழக நிறுவனர் மணிவண்ணன் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், அணிகளுக்கும் கோப்பைகளை வழங்கினார். இந்தப் போட்டியை ஏராளமான பொதுமக்களும் இளைஞர்களும் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)