Last Updated:
கான்பூரில் ஷாலினி பாண்டே துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி, போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் பெண் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் ஷாலினி பாண்டே. கலர் கலரான ஆடையில் வித விதமாக ரீல்ஸ் எடுத்து, இன்ஸ்டா அக்கவுண்டை நிரப்பி தள்ளுவதே இவரின் முழு நேர ஹாபி. பார்ப்பதற்கு குடும்ப குத்து விளக்காக தோற்றமளிக்கும் ஷாலினிக்கு, இன்னொரு முகமும் உண்டு. அந்த முகத்தை வெளியுலகிற்கு காட்டி சம்பவம் செய்தவர், தற்போது சர்ச்சையிலும் சிக்கி உள்ளார்.
லேடி தாதா, கெத்து குயின் என்ற மிதப்பில் கான்பூர் – டெல்லி நெடுஞ்சாலையில் துப்பாக்கியுடன் ஆட்டம் போட்டு ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். பட்டப்பகலில் துப்பாக்கியுடன் ஷாலினி வெளியிட்ட ரீல்ஸ், வட மாநிலங்களில் புழுதி புயலாய் வீசி, காண்போரின் கண்களை சிவக்க வைத்தது.
துப்பாக்கிக்கு முறையாக அனுமதி இருப்பினும் பொது இடத்தில் இப்படியா சுழற்றுவதா? என நெட்டீசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்திய ஆயுதச் சட்டம் 1959 இன் கீழ், பொது இடங்களில் ஆயுதங்களை எடுத்துச் செல்வது, அவற்றை ஸ்டைலாகக் காண்பிப்பது அல்லது சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்துவது சட்டப்பூர்வ குற்றமாகும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உரிமத்தை ரத்து செய்யலாம். அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கவும் வழி உள்ளது.

இந்நிலையில் ஷாலினியின் எல்லை மீறல் சம்பவம் குறித்து கான்பூர் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். சர்ச்சையில் சிக்கியது தெரிந்தும், ஷாலினி தனது இன்ஸ்டா அக்கவுண்டில் இன்னமும் அக்டிவ்வாக தான் இருக்கிறார். போலீசார் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஷாலினி அட்ராசிட்டிக்கு எண்டு கார்டு போட முடியும் என்று நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்திய ஆயுதச் சட்டம் 1959 இன் கீழ், பொது இடங்களில் ஆயுதங்களை எடுத்துச் செல்வது, அவற்றை ஸ்டைலாகக் காண்பிப்பது அல்லது சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்துவது சட்டப்பூர்வ குற்றமாகும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உரிமத்தை ரத்து செய்யலாம், அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கவும் வழி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
July 11, 2025 8:52 PM IST
தேசிய நெடுஞ்சாலையில் பெண் செய்த அதிர்ச்சி செயல்.. ரீல்ஸ் மோகத்தில் ரோட்டில் அத்துமீறல்.. என்ன நடந்தது?