தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஒருங்கிணைப்பாளர்களாக (ONUR) கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா மற்றும் அஸ்ஸெய்யது ஹஸன்மௌலானா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்விருவரும் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் இந்து மற்றும் முஸ்லிம் மத விவகாரங்களுக்கான இணைப்பாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நியமனம் நிதி, சிறைச்சாலை அலுவலகம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜேயதாச ராஜபக்சவினால் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வினை வலுப்படுத்தல், சக இனங்களுக்கு இடையில் சமாதானம் மற்றும் சகவாழ்வை கட்டியெழுப்பும் நோக்கில் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள செயற்பணிகளை ஒருங்கிணைத்தல் அடிப்படையில் இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.

