தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள், 5G இணைய வேகப் பரிசோதனைகள் சுமூகமாக நடைபெற்றுள்ளதாகத் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்ஸில் தெரிவித்துள்ளார். 5G இணைய வேகம், 4G, 5G இணைய வேகங்கள் திருப்திகரமாக உள்ளன. பள்ளி விடுமுறை என்பதால் சனிக்கிழமை ஏராளமான மக்கள் வருகை புரிவார்கள். டெல்கோ,நெட்வொர்க்குகளில் எந்தவித சிக்கலும் இன்றி நிகழ்வு சிறப்பாக நடைபெறும் என அவர் சொன்னார்.
ஊடகப் பணியாளர்களுக்கான ஊடக மையங்கள், பிரதான மேடை,அணிவகுப்பு நடைபெறும் பாதைகளுக்கு அருகில் ஊடகவியலாளர்களுக்காக யூனிஃபை அக்சஸ்,அதிவேக லேன், கேபிள் வசதிகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இம்முறை தேசிய தின செய்த சேகரிப்பிற்காக உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த 569 நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள், வீடியோகிராபர்கள் பதிவு செய்துள்ளனர் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினாருமாகி அவர் சொன்னார்.
மேலும், அமைச்சகங்கள், முகமைகளைச் சேர்ந்த 241 அதிகாரிகள் என மொத்தம் 810 ஊடகப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இது கடந்த ஆண்டின் 600 பேரைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க உயர்வாகும். நிகழ்விடத்தில் அவசர மருத்துவத் தேவைகளைக் கவனிக்க மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அடங்கிய மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அணிவகுப்பில் பங்கேற்பவர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன. தேசிய தினக் கொண்டாட்டங்கள் எவ்வித தடையுமின்றி வெற்றிகரமாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் உறுதி அளித்தார்.
(சண்முகம் செல்வம்)



