சென்னை: தேசிய சப்-ஜூனியர், ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் தமிழத்தைச் சேர்ந்த வீரர் கே.எஸ். அரிஹந்த், மகாராஷ்டிர வீராங்கனை அனிகா துபே ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
சென்னையியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் ஆடவர் இறுதிப் போட்டியில் முதல்நிலை வீரரான அரிஹந்த் 11-8, 12-10, 10-12, 11-5 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேச வீரர் யுஷா நபீஸை வீழ்த்தினார்.
மகளிர் பிரிவில் அனிகா துபே 11-5, 11-8, 11-8 என்ற புள்ளிக் கணக்கில் அகான்ஷா குப்தாவை தோற்கடித்தார்.

