• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தேசிய கீதம் இசைக்கும் போது நிதிஷ் குமார் செய்த செயல்.. எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

GenevaTimes by GenevaTimes
March 21, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
தேசிய கீதம் இசைக்கும் போது நிதிஷ் குமார் செய்த செயல்.. எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 21, 2025 8:15 PM IST

பாட்னாவில் செபக்தக்ரா உலகக் கோப்பை துவக்க விழாவில், தேசிய கீதம் இசைக்கும் போது நிதிஷ் குமார் சிரித்துப் பேசினார். இதனால் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்துள்ளனர்.

News18News18
News18

பிஹார் மாநிலம், பாட்னாவில், பாடலிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் செபக்தக்ரா உலகக் கோப்பை துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருடன், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் தீபக் குமார் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

விழா துவக்கத்தின் போது எப்போதும்போல், தேசியக் கீதம் இசைக்கப்பட்டது. அப்படி தேசிய கீதம் இசைக்கப்பட்டு, பாடப்பட்டுவந்த நேரத்தில் திடீரென முதலமைச்சர் நிதிஷ் குமார், தன் அருகே இருந்த அவரின் முதன்மைச் செயலாளர் தீபக் குமாரிடம் ஏதோ சிரித்துப் பேசினார். தொடர்ந்து கீழே இருந்த ஒருவருக்குக் கைக்கூப்பி வணக்கம் வைத்தார்.

இந்த இரு சமயத்தின்போதும், முதன்மைச் செயலாளர் தீபக் குமார், முதல்வரிடம் தேசிய கீதம் பாடப்படுவதை நினைவுப்படுத்தினார். இருந்தபோதும், நிதிஷ்குமார் இந்தச் செயலைச் செய்திருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

இதையும் படியுங்கள் : 65 ஆபாச வீடியோக்கள்.. 30 மாணவிகள்.. பேராசிரியரின் கொடூர செயல்

இந்நிலையில், எதிர்க்கட்சியினர் முதலமைச்சர் நிதிஷ் குமார் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். எதிர்க்கட்சியின் தலைவரான தேஜஸ்வி யாதவ் இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “தினமும், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர்களை அவமதிக்கும் முதல்வரே குறைந்தப் பட்சம் தேசிய கீதத்தையாவது அவமதிக்காமல் இருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

कम से कम कृपया राष्ट्र गान का तो अपमान मत करिए मा॰ मुख्यमंत्री जी।

युवा, छात्र, महिला और बुजुर्गों को तो आप प्रतिदिन अपमानित करते ही है।

कभी महात्मा गांधी जी के शहादत दिवस पर ताली बजा उनकी शहादत का मखौल उड़ाते है तो कभी राष्ट्रगान का!

PS: आपको याद दिला दें कि आप एक बड़े प्रदेश… pic.twitter.com/rFDXcGxRdV


— Tejashwi Yadav (@yadavtejashwi) March 20, 2025

அதேபோல், தேஜஸ்வி யாதவ்வின் தந்தை லல்லு பிரசாத் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில், அந்த வீடியோவைப் பதிவு செய்து, “தேசிய கீதம் அவமதிக்கப்படுவதை இந்தியா ஏற்காது” எனத் தெரிவித்துள்ளார்.

First Published :

March 21, 2025 8:15 PM IST

Read More

Previous Post

அமெரிக்க கல்வி துறை தொடர்பில் ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு

Next Post

200+ ரன் இலக்கை சேஸ் செய்த பாகிஸ்தான்: ஹசன் நவாஸ் அதிரடி சதம் – NZ vs PAD 3வது டி20 | Pakistan beats new zealand in t20i Hasan Nawaz scores ton

Next Post
200+ ரன் இலக்கை சேஸ் செய்த பாகிஸ்தான்: ஹசன் நவாஸ் அதிரடி சதம் – NZ vs PAD 3வது டி20 | Pakistan beats new zealand in t20i Hasan Nawaz scores ton

200+ ரன் இலக்கை சேஸ் செய்த பாகிஸ்தான்: ஹசன் நவாஸ் அதிரடி சதம் - NZ vs PAD 3வது டி20 | Pakistan beats new zealand in t20i Hasan Nawaz scores ton

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin