Last Updated:
அஜித் பவாரின் மறைவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவராக அவரது மனைவி சுனேத்ரா பவார் பொறுப்பேற்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித் பவாரின் மறைவைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவராக யார் பொறுப்பேற்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் அவரது மனைவியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுனேத்ரா பவார், அந்தப் பொறுப்பை ஏற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சாகன் புஜ்பால் மற்றும் பிரபுல் படேல் ஆகியோர் சுனேத்ரா பவாரை சந்தித்ததாகவும், அவரை தேசியத் தலைவராக ஆதரிப்பதாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி, மறைந்த அஜித் பவார் தொகுதியின் இடைத் தேர்தலில் சுனேத்ரா பவார் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், அஜித் பவாரின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும் மகாராஷ்டிரா அமைச்சருமான நர்ஹரி ஜிர்வால், மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் மறைவைத் தொடர்ந்து சுனேத்ரா பவாரை மாநில அமைச்சகத்தில் சேர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புவதாகக் கூறியிருப்பதும் கவனம் பெற்றுள்ளது.


