குற்றப் புலனாய்வுத்துறையினரால் (CID) நேற்று (20) கைது செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஓகஸ்ட் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று (21) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமாக தாக்குதல் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்டார்.
முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் தாம் கைதுசெய்யப்படுவதை, தவிர்க்கும் வகையில் முன்பிணை வழங்குமாறு அவர் நீதிமன்றை கோரியிருந்தார்.
எனினும், அவரது முன்பிணை கோரிக்கை கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவினால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

