பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனையைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்துடன் தேங்காய் எண்ணெயில் இடம்பெறும் கலப்படத்தைத் தடுக்கும் வகையில்இ விரைவில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.
கோப் குழு முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கும் போதே, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதில் பணிப்பாளர் நாயகம் சமந்தா கருணாரத்ன இந்தத் தகவலை வெளிப்படுத்தினார்.
தேங்காய் எண்ணெய்
‘தற்போது உண்மையில் தேங்காய் எண்ணெயில் பல பிரச்சினைகள் உள்ளன. அதனால் நாங்கள் ஒரு வர்த்தமானி அறிவித்தலை வரைவு செய்து வைத்துள்ளோம், அது விரைவில் வெளியிடப்படும்.

அந்த வர்த்தமானிக்கு அமைவாக, இனிவரும் காலங்களில் தேங்காய் எண்ணெய் பொட்டலமிட்டு விற்பனை செய்யவே ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
ஏனெனில் திறந்த நிலையில் விற்பனை செய்வதனாலேயே அதிகளவில் கலப்படம் நடைபெறுகிறது. மேலும், பொட்டலமிட்டு வரும்போது அதற்கு ஒரு தனித்துவம் / அடையாளம் இருக்கும்.
தற்போது அது யாருடைய தயாரிப்பு, எங்கிருந்து வருகிறது, என்ன செய்யப்பட்டு வருகிறது, சுத்திகரிக்கப்பட்டு வருகிறதா அல்லது கலப்படம் செய்யப்பட்டு வருகிறதா என்பதை அடையாளம் காண முடிவதில்லை.
அந்த லேபிளில் தயாரிப்பின் பெயர், எடை, விலை, காலாவதியாகும் திகதி, தொகுதி எண், உற்பத்தியாளரின் விபரங்கள் ஆகிய அனைத்தும் இடம்பெற்றிருக்கும்.’ என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

