Last Updated:
அமெரிக்க அதிபர் டிரம்ப், தெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என எச்சரித்துள்ளார்.
தெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், தான் கூறியபோதே ஈரான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும் எனவும், அவமானகரமாக, மக்களின் உயிர் வீணாக பறிபோவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க முடியாது என மீண்டும் மீண்டும் தான் தெரிவித்து வருவதாகக் கூறிய டிரம்ப், தெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டுமென எச்சரித்துள்ளார்.
இதனிடையே, மத்திய கிழக்கு பகுதிகளை உள்ளடக்கிய ராணுவ பகுதிகளில் படைகளைக் குவிக்க உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். அமெரிக்க படைகளைப் பாதுகாக்கும் நோக்கத்திலும், தற்காப்பு நிலையை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
June 17, 2025 1:00 PM IST
“தெஹ்ரானில் இருந்து அனைவரும் உடனே வெளியேறுங்கள்..” அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!


