4
தெஹிவளை அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தின் 9ஆவது வருடாபிஷேக இலட்சார்ச்சனை விழா இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகளின் தலைமையில் 9 ஆம் வருட இலட்சார்ச்சனை பூஜை ஆரம்பித்து தொடர்ந்து 10 நாட்கள் காலையும் மாலையும் விசேட பூஜைகளும் தீப ஆராதனைகளுடனும் நடைபெற்று எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை ஸ்ரீ ஜெயவீர பஞ்சமுக ஆஞ்சநேயப் பெருமானுக்கு அதிவிசேட திரவியங்களைக் கொண்ட வலம்புரிச் சங்குகளினால் அபிஷேகம், விசேட பூஜைகள் என்பன நடத்தப்படவுள்ளன.