தெலோக் பிளாங்கா கிரசென்ட், பிளாக் 17A கீழ்ப்பகுதியில் 29 வயதுமிக்க ஆடவர் ஒருவர் இறந்து கிடந்ததாக கூறப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் உடல்களை மூடிவைக்கும் நீல நிற கூடாரத்தைக் கண்டதாக மதர்ஷிப் தளத்துடன் பேசிய சிட்டி நுசைபா என்ற குடியிருப்பாளர் கூறினார்.
மேலும் மதியம் 1.15 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர் என்று அது கூறியது.
அங்கு, 29 வயதுடைய அந்த ஆடவர் அசைவில்லாமல் தரையில் கிடந்ததாகவும், அவர் இறந்தது சம்பவ இடத்திலேயே உறுதி செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், காவல்துறையினர் எந்தவித சதிச்செயலையும் சந்தேகிக்கவில்லை என்று கூறினர்.
இதில் மனநல பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 7 இன்கீழ் 21 வயதுமிக்க பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் (SCDF) மதியம் 1:20 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக மதர்ஷிப்பிடம் அது கூறியது.

