தெலுக் பிளாங்காவில் இன்று (நவம்பர் 29) காபி கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
அது பிளாட்டுக்கு கீழ் உள்ள கடை என்பதால் அங்கு வசிக்கும் சுமார் 80 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
செம்பவாங்கில் காணப்பட்ட “கருநாகம்” – பொதுமக்கள் அச்சம்
தெலுக் பிளாங்கா ஹைட்டில் உள்ள புளோக் 61 இல் இன்று காலை 11:10 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) ஒரு ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது.
அங்குள்ள சில கடைகளில் தீ பற்றியதாக கூறப்பட்டுள்ளது. பின்னர், 3 தண்ணீர் பீச்சியடிக்கும் கருவிகளை பயன்படுத்திய SCDF வீரர்கள், தீயை அணைத்தனர்.
ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதற்கான காரணம் குறித்த விசாரணை தொடர்கிறது.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் அதிரடி சோதனை: 12 ஊழியர்கள் கைது – 3 பேருக்கு அபராதம்
The post தெலுக் பிளாங்கா: தீக்கிரையாகிய காபி கடை… 80 பேர் வெளியேற்றம் appeared first on Tamil Daily Singapore.

