Last Updated:
தெலங்கானாவில் நில அளவைத் துறை துணை இயக்குநர் வீட்டில் கத்தை கத்தையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாயை ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றினர்.
தெலங்கானாவில் நில அளவைத் துறை துணை இயக்குநர் வீட்டில் கத்தை கத்தையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாயை ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றினர்.
தெலங்கானாவில் நில அளவைத் துறை துணை இயக்குநராக பணியாற்றி வரும் நரஹரி ராவ் சுங்கரி (Narahari Rao Sunkari) வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அதனடிப்படையில், ஹைதராபாத்தில் உள்ள நரஹரி ராவ் சுங்கரியின் வீடு மற்றும் அவரது தொடர்புடைய 11 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, நரஹரி ராவ் சுங்கரியின் வீட்டின் பரண் மீது பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கைப்பற்றினர். இதேபோன்று பெருமளவிலான தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
மேலும் முறைகேடாக சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை சேர்த்து வைத்திருப்பதை கண்டறிந்த அதிகாரிகள், அது தொடர்பான முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
Jun 16, 2026 10:05 PM IST


