• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தெலங்கானா: தொடரும் தெருநாய்கள் படுகொலை… மேலும் தொடர்வதால் காவல்துறை விசாரணை தீவிரம்… | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 31, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தெலங்கானா: தொடரும் தெருநாய்கள் படுகொலை… மேலும் தொடர்வதால் காவல்துறை விசாரணை தீவிரம்… | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்த சம்பவம் தொடர்பாக, இந்திய தெரு விலங்குகள் அறக்கட்டளையின் (Indian Street Animals Foundation) கொடுமை தடுப்பு உதவியாளரான முடாவத் ப்ரீத்தி, சரபாகா காவல் நிலையத்தில் முறையான புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறை முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்துள்ளது.

10 நாட்களில் 100 நாய்கள் கொலை

முதல் தகவல் அறிக்கையின்படி, நாகர்கர்னூலைச் சேர்ந்த முடாவத் ப்ரீத்தி, ஜனவரி 27 அன்று காவல்துறையிடம் அளித்த மனுவில், தும்மைப்பள்ளி கிராமத்தில் கடந்த 10 நாட்களில் சுமார் 100 தெரு நாய்கள் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டதாக தனக்கு தகவல் கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கொடூரச் செயல், அந்தக் கிராமத்தின் சர்பஞ்ச் மற்றும் பஞ்சாயத்து செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்றதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சர்பஞ்சின் அதிகார வரம்பிற்குள் உள்ள கிராமத்தில் நடந்ததாகக் கூறப்படுவதால், உள்ளாட்சி நிர்வாகத்தின் பங்கு குறித்தும் பல கேள்விகள் எழுந்துள்ளன.

ரூ.18,000க்கு ‘நாய் கொலையாளிகள்’ நியமனம்?

விலங்கு நல ஆர்வலரான அடுக்காபுரம் கௌதம் மற்றும் கிராம சர்பஞ்ச் இடையே நடைபெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடலில், நாய்கள் விஷ ஊசி மூலம் கொல்லப்பட்டதை சர்பஞ்ச் ஒப்புக்கொண்டதாகவும், இந்தச் செயலைச் செய்ய ரூ.18,000 சம்பளம் கொடுத்து சில நபர்களை வேலைக்கு அமர்த்தியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்கொண்ட விசாரணையில், கிராம பஞ்சாயத்து ஊழியரான ரவி என்பவர் நாய்களின் சடலங்களை அப்புறப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அடுக்காபுரம் கௌதம் மற்றும் வேலைக்கு அமர்த்தப்பட்ட நபராகக் கூறப்படும் கோபி இடையே நடந்த மற்றொரு உரையாடலில், கடந்த 10 நாட்களாக நாய்களுக்கு தொடர்ந்து விஷம் வைக்கப்பட்டதாக கோபி தெரிவித்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்பஞ்சின் கூற்றுப்படி, கொல்லப்பட்ட நாய்களின் சடலங்கள் கிராமத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம்

இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தநிலையில், விலங்கு நல உரிமை அமைப்புகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. விலங்கு நல ஆர்வலரான அடுக்காபுரம் கௌதம், இது மனிதநேயமற்றதும், சட்ட விரோதமானதும் எனக்கூறி, இதில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற கொடூரச் செயல்கள் மீண்டும் நடைபெறாத வகையில், விலங்குகள் பாதுகாப்புச் சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், உள்ளாட்சி நிர்வாகங்களின் பொறுப்புணர்வை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விசாரணை தீவிரம்

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தீவிரமாக ஆய்வு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தெரு நாய்கள் பாதுகாப்பு குறித்த விவகாரத்தில், இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்களின் வசதிக்காக விலங்குகள் கொடூரமாக பலியாக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Read More

Previous Post

விக்ரமசிங்கவை பரிந்துரைத்தார் ஜனாதிபதி

Next Post

FD | மூத்த குடிமக்களுக்கு சிறந்த வட்டி வருமானத்தை வழங்கும் FD திட்டங்கள்..! | வணிகம் போட்டோகேலரி

Next Post
FD | மூத்த குடிமக்களுக்கு சிறந்த வட்டி வருமானத்தை வழங்கும் FD திட்டங்கள்..! | வணிகம் போட்டோகேலரி

FD | மூத்த குடிமக்களுக்கு சிறந்த வட்டி வருமானத்தை வழங்கும் FD திட்டங்கள்..! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin