Last Updated:
தெலங்கானாவில் சுரங்க விபத்தில் சிக்கிய 8 தொழிலாளர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் இரவிலும் ஈடுபட்டனர்.
தெலங்கானாவில் சுரங்க விபத்தில் சிக்கிய 8 தொழிலாளர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் இரவிலும் ஈடுபட்டனர்.
சென்னைக்கு கிருஷ்ணா நீரைத் தரும் ஸ்ரீசைலம் அணையின் வலதுபுறக் கரை ஆந்திராவிலும், இடதுபுறக் கரை தெலங்கானாவின் நகர் கர்னூல் மாவட்டத்திலும் உள்ளன. இதில், தெலங்கானா பகுதியில் ஸ்ரீசைலம் அணையில் இருந்து தேவரகொண்டாவுக்கு சுரங்கம் அமைத்து தண்ணீர் எடுத்துச் செல்லும் திட்டத்தின் பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று சுரங்கத்திற்குள் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்த போது, வெளிப்புறத்தில் இருந்து 14-ஆவது கிலோ மீட்டரில், தோமலபென்ட்டா என்ற பகுதியில் சுரங்கத்தின் மேற்கூரை சரிந்து விபத்துக்குள்ளானது.
சுரங்க விபத்தில் சிக்கிய பலரும் நல்வாய்ப்பாக மீட்கப்பட்ட நிலையில், டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 8 தொழிலாளர்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க: பிரதமர் மோடியின் முதன்மை செயலராக சக்தி காந்த தாஸ் நியமனம்.. மத்திய அரசு அறிவிப்பு
இதனிடையே, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி, சூழல் குறித்து கேட்டறிந்தார். மேலும், தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார்.
February 23, 2025 7:18 AM IST


