நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்ன வெளியேறும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபை (Road Development Authority) இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாரதிகளுக்கு எச்சரிக்கை
இந்நிலையில், வெள்ள நிலையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும், தெற்கு அதிவேகப் பாதையில் பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |



&w=1200&resize=1200,675&ssl=1)