Last Updated:
முதல் டி20 கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் இரவு 7 மணிக்கு ஆரம்பம் ஆகிறது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாக உள்ளது. இதில் காயம் காரணமாக ஓய்வில் இருந்து வந்த ஹர்திக் பாண்டியா அணியில் இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்க அணியும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணியும் கைப்பற்றின.
இதையடுத்து டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இதில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுவார். இந்த தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், பும்ரா உள்ளிட்ட வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்ட்யா காயம் அடைந்திருந்தார். இதன் காரணமாக அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவில்லை.
இருப்பினும் டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற்றிருந்தார். இந்த சூழலில் நாளை நடைபெறும் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இறுதி நேரத்தில் மாற்றம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
December 08, 2025 9:10 PM IST


