Last Updated:
120 பந்துகளை எதிர்கொண்ட அவர் 135 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தது குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அவை இணையத்தில் விராட் கோலி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை நாயகனாக விராட் கோலி இருந்து வருகிறார். அவர் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மட்டுமே முழு கவனம் செலுத்துகிறார்.
இதேபோன்று மற்றொரு முன்னணி ஆட்டக்காரரான ரோஹித் சர்மாவும் இந்த இரண்டு ஃபார்மேட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கின்றனர். இருவரும் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். 120 பந்துகளை எதிர்கொண்ட அவர் 135 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஒரு ஃபார்மேட் போட்டியில் அதிக சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி ஏற்படுத்தினார். இதன் பின்னர் விராட் கோலி கூறியதாவது, “என்னை பொறுத்தவரையில் விழிப்புடன் கவனமாக இருப்பேன். நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து உங்களுடைய உணர்வுகளையும் வெற்றி தோல்வியின் போதும் கவனிக்க வேண்டும்.
December 01, 2025 8:17 PM IST
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மேட்ச்சில் சதம் அடித்தது எப்படி? சீக்ரெட் பகிர்ந்த விராட் கோலி


