புத்தாண்டுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், சிவகாசியில் புது வருடத்திற்கான காலண்டர் உற்பத்தி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பட்டாசு தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சு தொழிலுக்கும் பெயர் போன சிவகாசியில், அச்சு தொழில் அதிகம் நடைபெறுகிறது என்பதால், காலண்டர் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. காலண்டரில் மாதந்திர காலண்டர், நாட்காட்டி காலண்டர் இரண்டு வகை உள்ள நிலையில் இரண்டுமே சிவகாசியில் அதிகம் நடைபெறுகிறது.
இதில் மாதாந்திர காலண்டர் முழுக்க முழுக்க அச்சு தொழிலை மட்டுமே நம்பியுள்ளது. மாதாந்திர காலண்டர் எப்படி தயார் செய்யப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள சிவகாசி ஶ்ரீ கிருஷ்ணா ட்ரேடர்ஸ் சென்றிருந்தோம். மாதாந்திர காலண்டரை பொருத்தவரை முன்கூட்டியே அதற்கான டிசைன், பஞ்சாங்கம்,அரசு விடுமுறை போன்ற நாள் விபரங்களை காலண்டரில் மாத வாரியாக விளம்பரங்கள் அச்சிடாமல் மொத்தமாக அச்சிட்டு வைத்து விடுகிறார்கள். பின்னர் வாடிக்கையாளர் தனக்கு விருப்பமான டிசைனை தேர்வு செய்த பின்னர் அதில் நிறுவன பெயரை அச்சிட்டு, அதை ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான மாதங்களை வரிசையாக அடுக்கி டின்னும் நூலும் அடித்து மாதாந்திர காலண்டரை தயார் செய்கின்றனர்.
பொதுவாக இந்த காலண்டரின் விலை காலண்டரின் அளவு, பேப்பர் தரம், கலர் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் சப்ளை செய்யப்பட்டு வரும் இந்த காலண்டர்கள் தமிழ்நாடு தாண்டி பெங்களூர் போன்ற தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கும், தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
