தென்கொரியா: தென்கொரியாவில் ஜூன் 24-ஆம் தேதி(நேற்று) தலைநகர் சியோலுக்கு தெற்கே 45 கி.மீ தொலைவில் உள்ள ஹ்வாசோங் நகரில் உள்ள அரிசெல் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
தென் கொரியா லித்தியம் பேட்டரிகள் வெடித்ததைத் தொடர்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் குறைந்தது 22 பேர் இறந்தனர். இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான உடல்கள் தீயால் மோசமாக கருகியுள்ளதாக கூறினர்.

