கோலாலம்பூர்:
சீனாவிற்கு வெளியே விற்பனை மற்றும் செயல்பாடுகள் இரண்டையும் பெருக்க தென்கிழக்கு ஆசியாவில் அதன் இருப்பை விரிவுபடுத்தும் நோக்கில், ஆப்பிள் நிறுவனம் அதன் முதல் சில்லறை விற்பனை தளத்தை அடுத்த மாதம் மலேசியாவில் திறக்கிறது.
நாட்டின் முதல் ஸ்டோர் கோலாலம்பூரில் உள்ள தி எக்ஸ்சேஞ்ச் டிஆர்எக்ஸ் மாலில் வரும் ஜூன் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு திறக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் தனது இணையதளத்தில் இன்று அறிவித்தது.
இந்தியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் உட்பட பல இடங்களில் ஆப்பிள் ஏற்கனவே சில விற்பனைக் கடைகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


