துவாஸ் வியூ தங்கும் விடுதிக்கு எதிர் பகுதியில் உள்ள 67Q துவாஸ் சவுத் அவென்யூ 1 அருகே குப்பைகளும் வீணாகும் உணவுப்பொருட்களும் தினமும் குவிந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர்.
இந்த குப்பை கழிவுகளால் சுகாதாரமற்ற மற்றும் ஆபத்தான நிலைகள் உருவாவதாக கூறப்படுகிறது.
டோட்டோ டிரா லாட்டரி: மீண்டும் முதல் பரிசு S$10 மில்லியன் – வெல்லப்போவது யார்?
கடந்த அக்.14 ஆம் தேதி காலை 8 மணியளவில் இதுபோன்ற அசுத்தமான நிலையை கண்டதாக ஸ்டாம்ப் வாசகர் ஒருவர் கூறியுள்ளார்.
உணவு பொட்டலங்கள், மதுபான பாட்டில்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் மேலும் பல குப்பைகள் சுமார் 200 மீட்டர் நீளமுள்ள புல்வெளியில் சிதறி கிடந்ததாக அவர் விவரித்தார்.
இதனால் அப்பகுதி மிக அசுத்தமாகவும் கடுமையான துர்நாற்றத்தை வெளிப்படுத்தும் இடமாகவும் மாறியதாக வாசகர் கூறினார்.
உணவுகளை உண்ண பல காகங்களும் புறாக்களும் குப்பைகளைத் தோண்டுவதை காண முடிந்தது, இது பொது சுகாதாரம் மற்றும் பூச்சிக் கட்டுப்பாட்டு அபாயங்களை உருவாக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அங்கு பணிபுரியும் துப்புரவு குழுவினர் கூறியதாவது, “இது தினமும் ஏற்படும் ஒரு பிரச்சினை” என்று சொன்னதாக வாசகர் சொன்னார்.
“அந்த இடத்தில் பெரிய குழுவாக கூடும் ஊழியர்கள் சாப்பிடவும் மதுபானம் குடிக்கவும் செய்கிறார்கள்” என்றும் துப்புரவு குழுவினர் கூறினர்.
சிங்கப்பூரில் பதுங்கி இருந்த திருவாரூர் நபர் இந்தியா சென்றபோது கைது
மேலும், “அவர்கள் வேலை முடிந்ததும் எல்லாவற்றையும் அப்படியே புல்வெளியில் போட்டுவிட்டு நடந்து சென்றுவிடுவார்கள்” என்றனர்.
இது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA), இது குறித்து அறிந்திருப்பதாகவும், அந்தப் பகுதியில் அமலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளதாகவும் கூறியது.
இந்தப் பகுதியில் 2025 தொடக்கம் முதல், குப்பை கொட்டுதல் மற்றும் பிற பொது சுகாதார குற்றங்களுக்காக 28 டிக்கெட்டுகளை NEA வழங்கியுள்ளதாக NEA செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அந்தப் பகுதி தினந்தோறும் சுத்தம் செய்யப்படுவதாகவும், கூடுதல் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
நம் பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பது தனி மனிதர் ஒவ்வொருவரின் கடமை என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.

