துவாஸ் துறைமுகத்தில் (Tuas Port) புதிய கிரேனை வேறொரு இடத்துக்கு டெலிவரி செய்யும் போது அது சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று (ஜூன் 15) நடந்த இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித காயமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.
சிங்கப்பூரில் 2026 பொது விடுமுறை நாட்கள் – ஊழியர்களுக்கு MOM வெளியிட்ட முக்கிய குறிப்பு
இதனை PSA சிங்கப்பூர் நிறுவனம் மற்றும் சிங்கப்பூர் கடல், துறைமுக ஆணையம் (MPA) ஆகியவை கூட்டு செய்தி வெளியீட்டில் தெரிவித்தன.
புதிய கிரேன் விழுந்தது
துறைமுகத்தில் செயல்படாத தளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது புதிய கிரேன் விழுந்ததாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய வலைத்தளங்களில் பரவிய காணொளிகளில், கிரேன் கீழே விழுந்து கிடப்பதையும், கிரேன் விழுந்துவிட்டதாக பின்னணியில் யாரோ சத்தம் போடுவதையும் கேட்க முடிந்தது.
இது தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன.
மதுபோதையில் வாகனத்தை மரத்தில் மோதிய ஆடவர் கைது (Video)
எந்த சேதமும் ஏற்படவில்லை
அருகிலுள்ள துறைமுக உபகரணங்களுக்கும் மற்றும் சுற்றுப்புற இடங்களுக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அந்த கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
PSA இன் தற்போதைய செயல்பாட்டு தளங்கள் அனைத்துக்கும் முழுமையாக செல்லமுடிவதாகவும், மேலும் அனைத்து துறைமுக செயல்பாடுகளும் துறைமுக மேம்பாட்டுப் பணிகளும் பாதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தொடர்புடைய அதன் அதிகாரிகளுடன் இணக்கமாக பணியாற்றுவதாக PSA மற்றும் MPA தெரிவித்தன.
அதிகாரிகளை பார்த்ததும் கல்லாங் ஆற்றில் போ*தைப்பொருள் பையை வீசிய வெளிநாட்டு ஆடவர் கைது

